விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை வேலூர் சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால், இப்போது அந்தப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கிறது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விநாயகர் சதுர்த்திக்கு முன்பே சிலைகள் கரைக்கப்படும் இடத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாலன், வேலூர்.