குடியாத்தம் கஸ்பா கவுதமபேட்டை அம்பேத்கர் சிலை அருகில் சாலையின் நடுவே குடிநீர் திருப்பி விடும் குழாய் மூடி இல்லாமல் உள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி குடிநீருடன் கலக்கும் அபாயம் உள்ளது. மேலும் சிறுவர்-சிறுமிகள் அந்த வழியாக நடந்து செல்லும் போது குழாயில் கால்கள் இடறி கீழே விழுந்து விடுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் திருப்பி விடும் குழாய்க்கு மூடி போட வேண்டும்.
-ப.வானநாதன், கஸ்பா.