குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2026-05-17 14:00 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வேப்பங்குடி ஊராட்சி பாரதியார் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு வம்பனில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வரத்து தடைபடுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்