குழாய் பழுதால் வீணாகும் குடிநீர்

Update: 2026-05-10 17:14 GMT

வாலாஜாவில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் தபால் அலுவலகம் எதிரில், நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கப் பணிக்காக, புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும்போது ஒரு அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. அந்தப் பள்ளத்துக்கு கீழே பூமிக்கு அடியில் செல்லும் வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் குழாய் பழுதடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்து, குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும்.

-நாகராஜ், வாலாஜா.

மேலும் செய்திகள்