குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

Update: 2025-12-14 18:13 GMT

நெமிலி ஊராட்சிக்கு உட்பட்ட பரமேஸ்வரமங்கலம் பழைய காலனி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி வெளியேறாமல் குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் குழந்தைகளும், முதியவர்களும் வெளியே வர முடியாமல் அச்சப்படுகின்றனர். தேங்கிய மழைநீரில் கொசு உற்பத்தி, விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. அந்தப் பகுதி முழுவதும் நோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கி இருக்கும் மழைநீரை அதிகாரிகள் அகற்றுவார்களா?

-ராம்குமார், அரக்கோணம்.

மேலும் செய்திகள்