ஆம்பூர்-தார்வழி செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலத்துக்கு கீழே மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக நடந்தோ, வாகனங்களிலோ செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆஷா, ஆம்பூர்.