திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, பெட்ரோல் பங்குக்கு அருகே பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மழைக் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.