மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம்

Update: 2025-12-14 17:59 GMT

திருவண்ணாமலை ஒன்றியம் சின்னகல்லப்பாடி கிராமத்தில் மேற்கு தெருவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டியின் தூண்கள் சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குடியிருப்புகளுக்கு அருகில் இருப்பதால் விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. சேதமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டப்படுமா?

-செல்வம், சின்னகல்லப்பாடி.

மேலும் செய்திகள்