சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா கோழிக்குடிப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் பொதுமக்கள் அன்றாட தேவைக்கு கூட குடிநீர் இன்றி மிகவும் சிரமமடைகின்றனர். சிலர் நெடுந்தூரம் நடந்துசென்று குடங்களில் தண்ணீர் எடுத்தும், லாரி தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.