திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். ரெயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் சாலை பள்ளமாக இருப்பதால் சிறிய மழை பெய்தாலும், மழைநீர் குளம்போல தேங்குகிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.