சென்னை கொடூங்கையூர், சோலையம்மன் கோவில் தெருவில் சாலை பள்ளமாக இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குகிறது. இதனால் அந்த பகுதிகளில் கொசுக்கடி அதிகமாக உள்ளது. மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.