வீணாகும் காவிரி குடிநீர்

Update: 2026-08-09 13:09 GMT

திருச்சி ஜீயபுரம் பகுதிகளில் இருந்து ராட்சத குடிநீர் குழாய் மூலம் புதுக்கோட்டை மாநகர பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பிருந்தாவனம் பஸ் நிறுத்தப் பகுதியில் இந்த குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுவதோடு, சாலையில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, சீராக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்