கோவை சிங்காநல்லூர் வசந்தா மில் ரோடு கிருஷ்ணாபுரம் மேடு முக்கு பகுதியில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் தினமும் குடிநீர் கசிந்து வீணாகி வருகிறது. பருவமழைகள் சரிவர பெய்யாத நிலையில் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதுபோன்ற சூழலில் இங்கு குடிநீர் வீணாவது வேதனையடைய செய்கிறது. எனவே அந்த குழாயை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.