சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2026-06-28 15:59 GMT

பர்கூர்-சின்ன பர்கூர் சாலையில் உள்ள பள்ளி மாணவிகள் விடுதி எதிரில் லேசான மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மாணவிகள் விடுதி சுற்றுச்சுவர் அருகில் மண், குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். சாலையில் தேங்கும் மழைநீரை அகற்றவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்