சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே இனிமேலாவது அதிகாரிகள் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த முன்வர வேண்டும்.