வீணாகும் தண்ணீர்

Update: 2026-06-28 12:23 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கோரைக்குழி கிராமத்தின் வடக்கு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு நீர்த்தேக்கத் தொட்டியில் ஆங்காங்கே ஓட்டைகள் விழுந்து சேதமடைந்துள்ளது. இதனால் தொட்டியில் ஏற்றப்படும் தண்ணீர் கீழே சிந்தி வீணாவதால், பொதுமக்களால் தேவையான அளவு தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த இந்த நீர்த்தேக்கத் தொட்டியைச் சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்