விருதுநகர் மாவட்டம் ராஜபளையம் திருவள்ளுவர்நகர், மேற்கு பாபுஜி நகரில் குடிநீர் போதுமான அளவு கிடைப்பதில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சிலர் குடிநீரை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.