குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2026-06-21 11:30 GMT

புதுக்கோட்டை மாநகராட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் அடிக்கடி உடைந்து, குடிநீர் வீணாவதால் சில வார்டுகளில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால், தற்போதைய கோடை காலத்தில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் தனியார் லாரிகளில் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கும் அவல நிலை உள்ளது. குறிப்பாக, சாலையோரங்களில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கேபிள் பதிக்கும் பணியின்போது குடிநீர் குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் வீணாக ஓடுகிறது. எனவே, அடிக்கடி ஏற்படும் இந்த குழாய் உடைப்புகளை தடுத்து, தடையின்றி சீரான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்