கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்று மின்மோட்டார் பழுதடைந்து, கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் தொட்டி வீணாகிக் கிடக்கிறது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட மின்சாதனப் பொருட்கள் தொடர்ந்து பாழாகி வருவதோடு, அப்பகுதி மக்கள் குடிநீரின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டி மூலம் மீண்டும் குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.