சிவகங்கை மாவட்டம் ஓ.புதூர் பஞ்சாயத்து அண்ணாநகர் கிராமத்தில் சில நாட்களாக குடிநீர் சரிவர வருவதில்லை. இதனால் அப்பகுதியினர் அன்றாட தேவைகளுக்கு குடிநீர் இன்றி மிகவும் அவதியடைகின்றனர். மேலும் சிலர் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண வேண்டும்.