கன்னியாகுமரி திருவேணி சங்கமம் பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் தண்ணீர் வருவதில்லை. மேலும் இலவச கழிவறைகளில் கதவுகள் சேதமடைந்து, முறையாக பராமரிக்கப்படாமலும் சுகாதரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் நலன்கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், கழிவறைகள் ஆகியவற்றை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.