சுகாதாரமற்ற குடிநீர்

Update: 2026-06-14 16:02 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் கீழப்பொட்டல்பட்டியில் கடந்த சில நாட்களாகவே குடிநீரில் கழிவுநீர் கலந்து சுகாதாரமற்ற முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இதனை பயன்படுத்த முடியாமல் அவதியடைவதுடன் வெளியே பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். மேலும் இதனால் தொற்றுநோய் பரவக்கூடிய அபாயமும் அதிகளவில் உள்ளதால் அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்