சேலம் மாவட்டம் வீரபாண்டி அடுத்த இனாம் பைரோஜி திருமணிமுத்தாறு ஆற்றங்கரை ஓரம் குடிநீர் குழாய் இருந்தது. இந்த குடிநீரை பல ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த குடிநீர் குழாயை அடைத்துவிட்டனர். இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.