அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் மிகவும் கீழே சென்றுவிட்டதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் குடிநீருக்கும், மற்ற தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் அன்றாடம் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாற்று ஏற்பாடு மூலமாகவோ அல்லது புதிய ஆழ்துளை கிணறு அமைத்தோ தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.