தர்மபுரி மாவட்டத்தில் கிராமங்களில் பொதுமக்களின் தேவைக்காக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்த குடிநீர் தொட்டிகள் பராமரிக்கப்படாததால் குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. சில இடங்களில் குடிநீர் தொட்டி பயன்படாமல் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை தினமும் பராமரிக்க வேண்டும்.