பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் அண்ணா நகரில் 2020-ல் ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் இயந்திரம் பழுதடைந்து தற்போது முற்றிலும் முடங்கியுள்ளது. ரூ.5 நாணயம் செலுத்தி தங்கு தடையின்றி குடிநீர் பெற்று வந்த பொதுமக்கள், இந்த பழுது காரணமாக கடந்த சில நாட்களாக சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் பழுதுகளை உடனடியாகச் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.