புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மூட்டாம்பட்டி கிராம மக்களின் வாழ்வாதாரமான சம்பாகுளம் ஊரணி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காடு போல காட்சியளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் போதிய தண்ணீர் இன்றி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, பருவமழைக்கு முன்பு இந்த ஊரணியைத் தூர்வாரி மீட்டெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.