மதுரை நகர் பெரியார் பஸ் நிலையம் சாலை எல்லீஸ்நகர் பாலத்தின் கீழ் பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் குடிநீர் வீணாவதுடன் இவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே கோடை காலத்தை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீணாகும் குடிநீரை சேமிக்கவும், உடைந்த குழாயை சரி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.