சங்ககிரி மலையடிவாரத்தில் ஆண்கள் மைதானம் பின்புறத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் குழாயில் சிலர் குழாய் மூலம் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.