சங்கராபுரம் அருகே பொரசப்பட்டு ஊராட்சி புரவளூர் கால்வாய் அருகே அமைந்துள்ள மினி குடிநீர் தொட்டி சேதமடைந்து பல வருடங்களாக பயன்பாடின்றி உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க சேதமடைந்த மினிகுடிநீர் தொட்டியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.