கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி நேரு நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடு குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பின் மேல் பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும்.