குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2026-05-10 11:11 GMT

திருச்சி மாநகராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட நாகப்பசாமி கோவில் பகுதியில் குழாய் பதிக்கப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. மேலும் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்