சிறுவரப்பூர் பஸ் நிறுத்தம் அருகே 3 வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட மினி குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. மேலும் கோடைக்காலம் தொடங்கி இருப்பதால் பஸ் ஏற வரும் பயணிகள் குடிநீர் இன்றி அல்லல்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.