திருநாவலூர் ஒன்றியம் பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியில் உள்ள மினி குடிநீர் தொட்டி கடந்த ஒரு வருடமாக பராமரிப்பின்றி காட்சிப்பொருளாக உள்ளது. கோடைக்காலம் தொடங்கி இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்காததால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.