சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மல்லிப்பட்டினம் மாணிக்கவாசகர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு, சிலர் தொலை தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். மேலும் பணம் கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமா?