ஈரோடு மாநகராட்சி 10-வது வார்டில் வில்லரசம்பட்டி குப்பை கிடங்கு அருகே உள்ள குடிநீர் குழாயில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி ரோட்டில் ஆறுபோல் ஓடுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.