பந்தலூர் அட்டி ஊராட்சி கிணற்றில் இருந்து குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். கோடை காலம் என்பதால் உடைந்த குழாயை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.