பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல் உள்ளதால் வெயில் நேரத்தில் இப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.