சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய மற்றும் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் குறிப்பாக கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகள் தண்ணீரின்றி அவதியடைகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு தேவையான குடிநீர் அமைத்துதர வேண்டும்.