ஆளூர் முதல் கட்டிமாங்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாக பாய்கிறது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி உடைந்த குடிநீர் குழாய்யை சீரமைப்பதுடன், சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டம்.
-சதீஷ் கிருஷ்ணன், ஆளூர்.