குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2025-12-14 16:40 GMT

திருச்சி மாவட்டம், உறையூர் செவ்வந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் சாலை ஓரம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி அவதியடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்