குடிநீர் பற்றாக்குறை

Update: 2025-12-14 15:10 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் அயன்நாச்சியார் கோவில் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு போதிய தண்ணீர் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அப்பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டு இருக்கும் போர்வெல் தண்ணீர் தொட்டியும், மின் இணைப்பு சுவிட்ச்சும்  நீண்ட நாட்களாக பயன்பாடின்றி காட்சிப்பொருளாகவே உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்