சேலம்-கரூர் அகல ரெயில் பாதை ராசிபுரம் வழியாக செல்கிறது. ராசிபுரம் டவுனில் இருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரை பகுதியிலும், நாமக்கல் செல்லும் வழியில் உள்ள முனியப்பன் கோவில் அருகிலும் ரெயில்வே பாலங்கள் உள்ளன. இந்த 2 பாலங்களின் அடியிலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாலத்திற்கு அடியில் பொதுமக்கள் செல்ல முடிவதில்லை. எனவே 2 பக்கமும் உள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்து தர வேண்டும்.