புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் திருவரங்குளம் ஊராட்சி பகுதியை சேர்ந்த மக்களின் தேவைக்காக குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி கட்டப்பட்டு 15 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில், தொட்டி முழுவதும் பாசி பிடித்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் சுகாதார பணியாளர்கள் தொட்டி மேல் ஏறி சுத்தம் செய்ய முடியாத வகையில் உள்ளதால், பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. எனவே இந்த தொட்டியை அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.