பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் மில்லத் நகரில் அப்பகுதி மக்களின் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் கட்டிமுடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.