வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2025-12-14 10:41 GMT

கும்பகோணம் அண்ணலக்கரஹாரம் பகுதி ஜி.கே. மூர்த்தி நகர் மற்றும் தாராசுரம் பகுதி சந்தியா நகரை இணைக்கும் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் நீர் வழிந்தோட வழியின்றி தேங்கி கிடக்கிறது. தேங்கி கிடக்கும் நீர் கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்