மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கின்றது. இதனால் குடிநீர் வீணாகுவதுடன் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஏற்பட்டு உள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?