பூட்டி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2025-12-07 13:42 GMT

ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களாக இந்த தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் பூட்டியே காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடைகளில் விற்கும் தண்ணீர் பாட்டிலை ரூ.20 கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூட்டி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


மேலும் செய்திகள்