சேலம் அம்மாபேட்டை காலனி உள்ள சாலையில் குடிநீர்குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதிமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.