சேந்தமங்கலம் ஜங்களாபுரத்தில் இருந்து குறவர் காலனி செல்லும் வழியில் சாலையின் அடியே குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 10 நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் சிக்கனத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு உடைந்த குழாயையும், பள்ளம் ஏற்பட்டுள்ள சாலையையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.